Google search engine
الرئيسيةUncategorizedAmerica Green card lottery Programme 2024

America Green card lottery Programme 2024

America Green card lottery Programme 2024 – Application for US DV (Diversity Visa)

அமெரிக்க லாட்டரி விசா விண்ணப்பிக்கும் முறை

Open Now ( from Oct 5, 2022)

End date: Nov 8, 2022 at 12 noon EST

இலங்கையர் விண்ணப்பிக்க முடியும்

GCE A/L சித்தியடைந்த எல்லோரும் விண்ணப்பிக்கலாம்

1. வேலை or கல்வி தகுதி: 12 ம் வகுப்பு (G.C.E A/L) சித்தியடைந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகைமை இருக்கவேண்டும்

அல்லது ( OR)

கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு வருட தொழிற்பயிற்சி தேவைப்படும் ஒரு தொழிலை (Professional Occupation) இரு வருடங்களாவது செய்திருக்க வேண்டும். உங்கள் தொழிலுக்கு அனுபவத்திற்கு என்ன அடிப்படை தேவை என்பதை கீழ் கண்ட website இல் போய் உங்கள் வேலையை search பண்ணி என்ன கல்வி/ தொழிற்பயிற்சி அதற்கு தேவை என அறிந்து கொள்ளுங்கள்

www.onetonline.org

2. ஒருத்தர் ஒரு விண்ணப்பத்துக்கு மேல் சமர்ப்பித்தால் விண்ணப்பிக்கும் தகுதி இழப்பீர்கள்

3. உங்கள் online விண்ணப்பங்களை முன்னர் பலர் தவறான முகவர் தளங்களில் பதிந்து மோசடியான email களால் காசை இழந்து இருப்பீர்கள். கீழ்கண்ட லிங் தான் சரியான லிங்.

dvprogram.state.gov

இதில் விண்ணப்பியுங்கள். சில browsers ல் இதை open பண்றது கஷ்டம். எனவே உங்கள் browsers ஜ update பண்ணவும்

4. இந்த லிங் இல் விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசம்

5. விண்ணப்பத்தை கவனமாக நிரப்புங்கள். நிரப்ப தொடங்க முதல் தேவையான விபரங்களை,பாஸ்போட்டை, புகைபடத்தை , பிள்ளைகள் மனைவி விபர்ங்களை எடுத்துவைத்து கொள்ளுங்கள்

புகைப்படம் எடுக்கும் போது முக்கிய கவனம் செலுத்துங்கள் இதில் விட்ட தவறுகள்ஆல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அநேகம்.

a). முன்பு இந்த விசாக்கு விண்ணப்பிக்க உபயோகித்த புகைப்படம் உபயோகிக்க வேண்டாம்.

b). பழைய படம் உபயோகிக்க முடியாது.

c). இதற்கு நீங்கள் உங்கள் போஃனில் சரியாக கீழ் கண்ட instruction க்கு ஏற்ப எடுத்த படத்தை கூட உபயோகிக்கலாம்.

d). கலர் போட்டோ, clear photo

e). உங்கள் தலை படத்தின் 1- 1 1/3 ” inch (22 mm – 35 mm ) இற்குள் வரணும் 2″ × 2″ 300 pixels per inch digital photo

f). கண்ணாடி, தொப்பி போட்டிருக்க முடியாது

சமய காரணம் தவிர தலைமுடியை மறைக்க கூடாது

g). நிழல் விழுந்திருக்க கூடாது

h). படத்தில் நீங்கள் சிரிக்கவோ முறைக்கவோ கூடாது

i). சாதாரணமாக போடும் சேர்ட் சட்டையுடன் எடுக்கலாம்

j). கண்கள் மூடாமல் திறந்து இருக்கவேண்டும்

தப்பாக /சரியாக எடுக்கப்பட்ட படங்களை இந்த லிங்கில் பார்க்கலாம்

—>PHOTO INSTRUCTION

6. விண்ணப்பிக்க காலாவதியாகாத பாஸ்போட் தேவை விண்ணப்பதாரியின் மனைவி பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தேவையில்லை பின்னர் தெரிவு செய்ய்பட்டால் தேவை

America Green Card Lottery Programme 2024

7. நீங்கள் ஒழுங்காக email check பண்ணும் email address ஒன்றும் தேவை

8. விண்ணப்பம் சமர்பித்த பின் confirmation பக்கத்தை print பண்ணி வைத்திருங்கள் இதிலுள்ள confirmation number உங்களுக்கு பின் online இல் விண்ணப்பத்தின் status check பண்ண தேவை

9. உங்களுக்கு மனைவி பிள்ளைகள் இருந்தால் அவர்கள் விபரங்களை நீங்கள் கொடுக்கவே வேண்டும். விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்கவேண்டும் என்று இல்லை ஆனால் உங்களுக்கு இருக்கவேண்டும் நீங்கள் திருமணமானவர் என்றால் கட்டாயம் மனைவியின் விபரங்கள் உள்ளடக்கப் படவேண்டும். 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் உள்ளடக்கப்படவேண்டும். இல்லையேல் பிறகு உள்ளடக்க முடியாது. அவர்களது புது புகைப்படங்களும் வேண்டும்.

10. கணவனும் மனைவியும் தனித்தனியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவர்களில் யார் விண்ணப்பம் லாட்டரியில் தெரியப்பட்டாலும் இருவரும் பயணிக்க முடியும்.

உங்களுக்கு 60 நிமிடங்கள் மட்டுமே உண்டு online இல் ஒரே முறையில் விபரங்களை சமர்பிக்க. 60 நிமிடத்தில் முடிக்கவில்லை எனில் உங்கள் விபரங்களை சமர்பிக்க முடியாது மீள தொடங்க வேண்டும். பிழையாக நிரப்பி அனுப்பிவிட்டால் மறுபடி சரியாக நிரப்பி அனுப்ப இரண்டு விண்ணப்பங்கள் ஆகி நீங்கள் விண்ணப்பிக்க முடியாதவராக நிராகரிக்கப்படுவீர்கள்.

எனவே விளையாடாமல் பொறுப்பாக விண்ணப்பியுங்கள். விண்ணப்பித்த உடனேயே Confirmation number page தோன்றும் அதை page ஐ print பண்ணிவைத்து கொள்ளுங்கள். அது வரவில்லை என்றால் உங்கள் விண்ணப்பம் சேரவில்லை என அர்த்தம்

லாட்டரியில் தெரியப்பட்ட அதிஷ்ட விண்ணப்பதாரிகள் May 6, 2023 இலிருந்து dvprogram.state.gov என்ற website இல் உங்கள் confirmation number மூலம் உங்கள் விண்ணப்பம் செலக்ட் செய்யபட்டதா இல்லையா என அறியமுடியும். May 6, 2023 இன் பின்னும் மேலதிகமாக செலக்ட் செய்யப்பட்டவர்களை Department of State இந்த website இல் போஸ்ட் பண்ணமுடியும்.

பயப்படாமல் நிதானமாக விண்ணப்பத்தை சரியாக நிரப்புங்கள். நாளைக்கு செய்யவம் எண்டு தூக்கிபோட்டுட்டு கடைசி நாள் அந்த browser சுத்திட்டு இருக்கும் போது தலையை பிய்க்காமல் இப்போதே அனுப்புங்கள்.

எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டதா தேவையான விபரங்களை எடுத்தாகி விட்டதா புகைப்படம் றெடியா இதோ இந்த REGISTER லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

REGISTER NOW

 

America Green Card Lottery Programme 2024

America Green Card Lottery Programme 2024

 

America Green card lottery Programme 2024 America Green card lottery Programme 2024 America Green card lottery Programme 2024

المادة السابقة
المقالة القادمة
RELATED ARTICLES

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Open chat
1
chat with jobss.lk
Hi, how can i help you?